Latest Tamil Quotes

The Reviewed Link for the Classic Tamil Quotes Collection is below. If you like our quotes, Kindly share them with your friends and family. Follow us on social media to get high-quality image quotes. Our social media links are given in the footer. 

சிந்தனையால் பயத்தை வெல்ல முடியாது. ஆனால் செயற்பாடு அதனைச் சரியாக செய்கின்றது.

யாரையும் திட்டாதே, சாபம் இடாதே, கெடுதல் நினைக்காதே, நீ எதை செய்கிறாயோ, அதுவே உன்னை வந்து சேரும்! நீ மனம் வருந்தினாலே போதும் உனக்கு பாதிப்பை தந்தவர்களுக்கான தண்டனை கிடைத்து தீரும்!! - பிரபஞ்ச நீதி

சில ஏமாற்றான்களே வாழ்க்கையின் மாற்றங்கள் ஆகிறன்றன

மலையை பார்த்து மலைத்து விடாதே மலை மீது யேறினால் அதுவும் உன் கால் அடியில்

வியர்வை துளிகளும் கண்ணீர் துளிகளும் உப்பாக இருக்கலாம் ஆனால் அவைதான் வாழ்க்கையை இனிப்பாக மற்றும்

குடும்பம் என்பது கடவுள் நமக்காக பூமியில் ஏற்பாடு செய்திருக்கும் சொர்க்கம்... அதை சொர்க்கமாக்குவதும்... நரகமாக்குவதும்.... நம்முடைய செயல்களில் தான் இருக்கிறது...

கவலை நாளைய துன்பத்தை போக்கப்போவதில்லை... ஆனால் இன்றைய சந்தோசத்தை அழித்து விடும்...

என் முழு நேர சிந்தனையும் உனக்காக செலவழித்த பின்பும் .... நாட்கள் நகர மறுக்கிறது உன் பிரிவில் மட்டும் ...

சிலரிடம் சில விசயங்களை புரியவைக்க கஷ்டப்படுவதை விட சிரித்துவிட்டு கடந்து செல்வதே சிறந்தது

கோபம் என்பது முட்டாள்தனத்தில் தொடங்கி, வருத்தப்படுவதில் முடிகிறது. கோபப்படும் போதெல்லாம் நம் எதிரி வெற்றி பெறுகிறான், நாம் தோற்று போகிறோம்.

சமமற்ற விசியங்களை சமப்படுத்த முயற்சிப்பது சமத்துவமின்மையின் மோசமான வடிவம்

உங்கள் நோக்கம் நிலவாக இருக்கட்டும். ஒருவேளை அதில் தோற்றால், நீங்கள் ஒரு நட்சத்திரத்தை வெல்லக்கூடும்.

நம்ம இருந்த இடத்துல இப்ப இன்னொருத்தர் இருக்கிறது பாக்குறப்போ மனசுல இருக்கும் ஒரு வலி... அத வார்த்தையால சொல்ல முடியாது

கண்கள் இமைகளை பகைத்துக் கொள்வது வீரம் ஆகாது

இரக்க மனமும் இரும்பாகி போகிறது, சிலர் சுயநலவாதியாகும் போது

வெற்றியின் படிகள்..! முதலாவது படி - தோல்வி இரண்டாவது படி - அவமானம் மூன்றாவது படி - கடின உழைப்பு நான்காவது படி - தன்னம்பிக்கை அடுத்தடுத்த படிகள் - விடாமுயற்சி கடைசி படி - வெற்றி

பணமா பாசமானு கேட்டா எல்லோரும் பாசம்னு சொல்லுவாங்க... ஆனா... அந்த பாசத்தோட அளவை நிர்ணயம் செய்வதே இங்கே பணம் தான்..!

எல்லா தவறுகளுக்கும் மன்னிப்பு உண்டு ஆனால்," என்ன செய்தாலும் மன்னிப்பு கிடைக்காத ஒரே தவறு துரோகம்...

ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கவேண்டிய அடிப்படை நற்குணம், தனக்குத்தானே உண்மையாக இருப்பது.

கோபத்திற்கு இருக்கும் மரியாதை யாரும் புன்னகைக்கு கொடுப்பதில்லை...

ஒவ்வொரு அனுபவத்தின் முடிவிலிருந்தும் ஒரு நல்ல பாடத்தை கற்றுக்கொள்வோம்... அதுவே நம் வாழ்க்கையில் வெற்றியடைய உதவும்...!!

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா

கோடி பணம் கொடுத்தாலும் மனிதன் பொய் சொல்வது கூடாது. கொடுத்த வாக்கை காப்பாற்ற முயல வேண்டும்.

குழந்தையாக பிறந்து, வளர்ந்து சிறுவனாகி, வாலிபனாய் மகிழும் நாம், வயது முதிர்ந்து இறப்பதை விரும்புவதில்லை.

பாதையை வெறுக்கும் பயணம் வெற்றிகரமாக முடிவதில்லை

தேவை முடிந்த பின்பும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது சிலரது தேடல்

அதிகம் பேசாதவனின் வாயிலிருந்து வரும் வார்த்தைகளுக்கு எப்போதும் அதிகமான மதிப்பு உண்டு...

வாழ்க்கையில் எல்லா விஷயமும் நமக்கு புடிச்ச மாதிரி நடக்காது...சில விஷயம் நடக்கும், சீல விஷயம் நம்ம தான் நடத்தனும்...

யாராக இருந்தாலும் அதிகம் பேசாமல் அளவோடு பேசி வந்தால் அனைவருக்கும் நலம்

கோபம் என்பது பிறர் செய்யும் தவறுக்கு உனக்கு நீயே கொடுத்து கொள்ளும் தண்டனை ..!

உயிருள்ள உறவினர்களில் யார் முக்கியம் என்பதை.. உயிரற்ற பணமே முடிவு செய்கிறது..!!

சிறு சிறு உறுத்தல்களே வாழ்க்கையின் மகிழ்ச்சியை குறைக்க காரணமாகின்றன.

உன்னை புரிந்து கொள்ளாத எதுவும் உன்னுடன் நிலைப்பதில்லை உன்னை புரிந்து கொண்ட எதுவும் உன்னை விட்டு விலகுவதும் இல்லை ...

எவன் ஒருவன் தனக்குத் தானே மனக் கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்கிறானோ, அவனே சுதந்திர மனிதனாவான்.

நீ யாரிடம் உன் ரகசியங்களை சொல்கிறாயோ அவரிடம் உன் சுதந்திரத்தை இழப்பாய்

குடி’ விலக்கு, 'கூடி வாழ பழகு. ‘சகித்தல்’ விலக்கு, "ரௌத்திரம் பழகு. 'சாதி' விலக்கு, 'சாதிக்க' பழகு. 'மதம்' விலக்கு, ‘மனிதம்' பழகு.

வேலை இல்லாதவனின் பகலும் நோயாளியின் இரவும் மிக நீளமானது.!

எவ்வளவு தான் நன்றாக பழகினாலும், ஒரு சிலரின் உண்மை குணம் சில சந்தர்ப்பங்களில் தான் நமக்கு தெரிகிறது...! இவ்வளவு நாட்கள் அவர்களின் உண்மை குணத்தை மறைத்து, வைத்திருந்தது அவர்களின் திறமையா? அல்லது, அறியாமல் இருந்தது நமது அறியாமையா என்று ?

"தமிழ்" என்று உச்சரித்தால் அதரங்கள் இரண்டும் அணைத்து கொண்டு உமிழ்நீரும் ஊற்றெடுக்க நா தழுவி நளினம் கொண்டே ஒலித்திடுதே!!!

மாற்றம் வேண்டும் எனில் அதை முதலில் நம்மிடமிருந்து ஆரம்பிக்க வேண்டும்.... நம்மிடம் மாற்றம் ஏற்படாமல் அதை பிறரிடமிருந்து எதிர்பார்ப்பது முறையாகாது....

பெற்றோர்களுக்காக ஏதாவதொன்றை விட்டுச் செல்லுங்கள் பெற்றோர்களை ஏதாவதொன்றிற்காக விட்டுச் செல்லாதீர்கள்

Thanks for spending time reading the Classic Tamil Quotes Collection. If you do like Tamil quotes, share them with your friends. For any correction or suggestion, kindly contact us by clicking here. Check out the similar quotes below. 

Related Quotes