The Reviewed Link for Anbu Tamil Quotes is below. If you like our quotes, Kindly share them with your friends and family. Follow us on social media to get high-quality image quotes. Our social media links are given in the footer.
அன்பான ஒருவரிடம் தோற்றுப் பாருங்கள் வெற்றியை விட தோல்வி எத்தனை சுகம் என்று தெரியும்...!!
உன் பலம் எவ்வளவு என்பதை உனக்கு பிடித்தமான இதயம் உன் அன்பினை ஏற்காமல் நிராகரிக்கும் போது) நிச்சயம் உணர்வாய்
சேமித்து வைக்க அன்பு ஒன்றும் சிறுசேமிப்பல்ல...... கொடுக்கப்பட வேண்டிய கொடை.....!
நான் உன் மீது வைத்துள்ள அன்பு எவ்வளவு என்று தெரிய வேண்டுமா கொட்டும் மழை துளிகளை எண்ணிப்பார்...
ஏமாற்றம் எனக்கு புதிதல்ல..
நான் ஏமாறும் விதம் தான் நாள்தோறும் புதிதாய் இருக்கிறது. சில நேரம் அன்பால்..
சில நேரம் நம்பிக்கையால்...
உலகில் உண்டான ஓரறிவு முதல் ஆறறிவு வரை உள்ள அனைத்து ஜீவ ராசிகளுக்கும் பொதுவான கருணை மொழி தான் இந்த அன்பு...
கிடைக்கும் என்பதில் பிரச்சனை இல்லை ஆனால் நிலைக்குமா என்பதில் தான் பிரச்சனை (அன்பு)
அன்பைக் கொடுங்கள் அதை நீங்கள் திரும்பப் பெற வேண்டும் என்பதற்காக அல்ல அந்த அன்பு அவர்களுக்கு நிறைய ஆறுதலைத் தரும் என்பதற்காக, அன்பு கொடுப்பது திரும்பப் பெறுவது அல்ல
அன்பின் எதிர்பார்ப்பு எப்போதும் அன்பாக தான் இருக்கும். அதற்கு ஏமாற தெரியுமே தவிர ஏமாற்ற தெரியாது...!
உன்னை விட்டு பிரியாமல் உன் அன்பில் உறங்க ஆசை விடியும் வரை அல்ல உயிர் பிரியும் வரை!
நிழல் தந்து நிழலுக்கு ஏங்கும் மரம் போல.... அன்பை தந்து அன்புக்கு ஏங்குகிறேன்..... உன்னிடம் மட்டும் என்னவளே...!
அன்பும் பாசமும் விலை பொருள் அல்ல மனதிற்கு பிடித்தவர்கள் மேல் வரும் ஓர் அழகான உணர்வு...
வார்த்தை எல்லை மீறினால் தரம் குறைந்து விட்டது என்று மட்டும் அர்த்தமில்லை அன்பு கூடிவிட்டது என்று கூட இருக்கலாம்
அன்புக்கும், ஆசைக்கும் அடிமை ஆகாதே ...!! நிச்சயமாக இரண்டுமே உன்னை ஒரு நாள் காயப்படுத்திவிடும் ..!!
தோற்றும் போகலாம் உண்மையான அன்பில் ஆனால் ஒருபோதும் ஏமாந்து போகக்கூடாது பொய்யான அன்பில்
அன்பு அர்த்தமற்ற வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றுகின்றது. நட்பு அர்த்தமுள்ள வாழ்வை அற்புதமாக மாற்றுகின்றது.
அன்பு ஒரு நாள் தோற்றுபோகிறது அதன் மதிப்பு தெரியாதவரிடம் காட்டும் போது..!
ஒருவரிடம் பேசவே கூடாது என்று முடிவு செய்த பிறகும் அவரிடம் மீண்டும் பேச தூண்டும் உணர்வே உண்மையான அன்பு...!
மனதில் அன்பு இருந்தாலே போதும் எதுவும் சாத்தியமே... கடினமான இதயம் கூட கரையும் அன்பை மழையாய் பொழியும் போது...
என் தனிமையில் தான் , உணர முடிகிறது உன் அன்பின் ஆழத்தை ,..
சுகங்களை பகிர்ந்து கொள்ளும் அன்பை விட சோகங்களை பகிர்ந்து கொள்ளும் அன்பு என்றும் உண்மையானது
பேசிக்கொண்டே இருப்பது மட்டும் அன்பு அல்ல.. புரிந்து கொண்டு பேசாமல் இருப்பதும் அன்பு தான்..!
அன்பை பெறுவதற்கும் கொடுப்பதற்கும் தகுதி தேவையில்லை ..... நல்ல மனம் போதும்.. தகுதி பார்த்து கொடுத்தால் அது அன்பு இல்லை ....
என்னிடம் நீ மூன்றாவது மனிதரிடம் பேசுவது போல் பேசியும், நான் மீண்டும் உன்னிடம் பேசுகிறேன் என்று அலட்சியமாக நினைத்து விடாதே.... அது உன்மேல் வைத்துள்ள அதீத அன்பினால் மட்டுமே...
தேடித்தேடிப் போய் காட்டுகிற அன்பு.. குப்பையை விட கேவலமான தாகி விடுகிறது....
வேஷம் இல்லாத உண்மையான அன்பு தான், இந்த உலகத்தில் எல்லா நோய்களுக்கும் மருந்து...
சேர்ந்து நின்றால் ஒற்றுமை வளரும்.
துணிந்து நின்றால் வலிமை வளரும்.
அன்பைப் பகிர்ந்தால் உறவுகள் வளரும்,
வலிகளை மறந்தால் ஆனந்தம் மலரும்.
அதிக அன்பு கூட நாம நேசிப்பவர்களுக்கு சில நேரம் தொல்லையாக தான் தெரிகிறது..!
எப்போதும் மறக்காமல் இருப்பது அன்பு அல்ல.. என்ன நடந்தாலும் வெறுக்காமல் இருப்பதுதான் உண்மையான அன்பு...!
காலங்கள் சிலரை மறக்க செய்துவிடும் ஆனால் ஒரு சிலரின் அன்பு காலத்தையே மறக்க செய்துவிடும்
அன்புக்காகவும் பாசத்திற்காகவும் ஏங்குவது தான் ஒரு மனிதன் அனுபவிக்கும் மிகப்பெரிய கொடுமை...!!
வேறெதுவுமே வேண்டாமென்று நினைக்க வைக்கும் வல்லமை உண்மை அன்பிற்கு மட்டுமே உண்டு.
விரும்பினால் மட்டும் விரும்புவது அன்பு அல்ல... வெறுத்தாலும் விடாமல் இருப்பது தான் உண்மையான அன்பு...!!!
வேசம் இல்லாத உண்மையான அன்பு தான் இந்த உலகத்தில் எல்லா நோய்களுக்கும் மருந்து. அந்த அன்பே பொய்யானால் உலகில் அதை விட கொடிய நோய் வேறு எதுவும் கிடையாது..!!
இரண்டு உடல்கள் வசிக்கும் ஒரு ஆன்மாவிற்காக உருவானதே அன்பு
உலகத்தின் மிகப்பெரிய துரோகம் ஒருவர் மேல் பொய்யான அன்பு காட்டி, அத அவங்கள உண்மைன்னு நம்ப வைக்குறதுதான்.
அன்பிற்கும் உயிர் இருப்பதை தெரிந்து கொண்டேன், நீ என்னை நேசிப்பதால்
அதிகமான அன்பும், நம்பிக்கையும், ஒரு நாள் அதிகமான காயத்தை தரும்....
ஒவ்வொரு முறை அன்பு என்னிடமிருந்து வாங்கப்படும் போதெல்லாம் கண்ணீரை மட்டுமே பரிசாக தந்து செல்கிறது !!
அன்பு என்பது ஆழ்கடல் போன்றது. கரையில் தேடினால், சிப்பிகள் தான் கிடைக்கும்... மூழ்கி தேடினால் தான் முத்துக்கள் கிடைக்கும்...!
சந்தர்ப்பம் பார்த்து பிரிய நினைப்பது அன்பல்ல... உயிர் பிரிகின்ற சந்தர்ப்பம் வந்தாலும் பிரியாமல் இருக்க நினைப்பதே உண்மை அன்பு ...!
காரணம் இல்லாமல் யார் மீதும் அன்பு வருவதில்லை ஆனால் அந்த காரணம் தான் யாருக்கும் புரிவதில்லை
அன்புக்காக ஏங்கி தேடாதீர்கள் அன்புக்காக ஏங்குபவரை தேடுங்கள்...! அந்த அன்பு நிலைத்திருக்கும் ஆயுள் வரை....
உறவுகள் காட்டும் அன்பு கூட ஆயுதம்தான் போல....
இந்த உலகில் உன்னை அழிக்க இன்னொருவருக்கு நீயே கொடுக்கும் ஆயுதம் அன்பு இந்த உலகில் உன்னை நீயே ஏமாற்றிக் கொள்வது இன்னொருவர் மீது வைக்கும் நம்பிக்கை
சிலர் அன்பை வார்த்தைகளால் உணர்த்தலாம்... சிலர் அன்பை உணர்வுகளால் உணர்த்தலாம்.. ஆனால்... சிலர் அன்பு புரியாது அதை காலம் உணர்த்தும் போது தான் கண்கள் கலங்கும்...!!
ஆயிரம் சொந்தங்கள் அணைத்திட இருந்தாலும்.. அன்னையே உன் போன்று அன்பு செய்ய யாரும் இல்லை இவ்வுலகில்...
நீ கொஞ்சி பேசும் அன்பு வார்த்தைகளின் ஸ்பரிசத்தால் என் கோபம் கூட நொடிகளில் கரைந்து தான் போகின்றது.
பிரிவும் கோபமும் ஒருவரை மறப்பதற்கு அல்ல.... அவர்களை அதிகமாக நினைப்பதற்கே...!
அன்பு என்பது நல் வெனம மாதிரி போட்டால் தான் முளைக்கும்... வம்பு என்பது புல் மாதிரி எதுவும் போடாமலே முளைக்கும்..
உண்மையான அன்பு இல்லாதவரிடம் உண்மையை சொல்ல மனம் யோசிக்கும் ஆனால் உண்மையான அன்பு உள்ளவரிடம் பொய் சொன்னால் மனம் உறுத்தும் அதுவே உண்மையான அன்பு.
காலங்கள் காலத்தால் கடந்து போகலாம். நினைவுகள் நில்லாமல் சிதைந்து போகலாம். அன்பு கொண்ட நெஞ்சம் ஒரு போதும் மறைந்து போவது இல்லை ...!
Thanks for spending time reading the Anbu Tamil Quotes. If you do like Tamil quotes, share them with your friends. For any correction or suggestion, kindly contact us by clicking here. Check out the similar quotes below.