Best Tamil Quotes About Life

Best Tamil Quotes About Life

The Reviewed Link for the Best Tamil Quotes About Life is below. If you like our quotes, Kindly share them with your friends and family. Follow us on social media to get high-quality image quotes. Our social media links are given in the footer.

அறிவை விட தைரியத்தினால் தான் பெரிய பெரிய காரியங்கள் சாதிக்கப்படுகின்றன...

உதிக்கும் போதும் மறையும் போதும் ரசிக்கும் உலகம் உச்சிக்கு வந்தால் திட்டி தீர்க்கும் சூரியனை மட்டுமல்ல மனிதனின் வளர்ச்சியும் கூட

வாழ்க்கை சொர்கமாவதும் நரகமாவதும் நம் எண்ணங்களை பொறுத்தே

தனியாக போராடுகிறேன் வெற்றி கிடைக்குமா என்று வருந்தாதே.. நீ தனியாக போராடுவதே வெற்றி தான்.

எவ்வளவு பெரிய வீட்டுல வாழுகிறோம் என்பது பெரிதல்ல!! - எவ்வளவு நிம்மதியாக வாழுகிறோம் என்பதே முக்கியம்!!

நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் நமக்கான பொறுப்புகள் என்ன என்று உணர்ந்தாலே போதும் வாழ்க்கையில் தெளிவும் நற்பெயரும் விரைவில் கிடைக்கும்...!!

வாழ்க்கையில் சந்தர்ப்பம் அனைவருக்கும் அமைகின்றது ஆனால் அதை பயன் படுத்துபவர்கள் தான் அரிது..!

வாழ்க்கையை அடிக்கடி திரும்பிப் பாருங்கள், நாம் அடைந்த வலிகளும் அதனைக் கடந்த வழிகளும் நமக்கு நம்பிக்கை தரும்..!!

ஒவ்வொரு அனுபவத்தின் முடிவிலிருந்தும் ஒரு நல்ல பாடத்தை கற்றுக்கொள்வோம்... அதுவே நாம் வாழ்க்கையில் வெற்றியடைய உதவும்...!!

யாருக்காகவும் உன்னை மாற்றிக்கொள்ளாதே, ஆனால் உனக்காக தன்னையே மாற்றிக் கொள்பவர் கிடைத்தால், அவர்களை தொலைத்து விடாதே

நீங்கள் செய்யும் தவறை உடனே திருத்திக் கொள்ளுங்கள் இல்லாவிட்டால் இன்னொரு தவறைச் செய்தவராகி விடுவீர்கள்

சில நேரங்களில் நாம் விட்டுக் கொடுத்த நிகழ்வுகள் தான், பின் நாளில் நம்மை ஏமாளியாக்கி விடுகிறது......

நமக்கு பிடிச்ச மாதிரி வாழ்க்கை துணை கிடைக்காவிட்டாலும் பிடிச்ச மாதிரி வாழ்க்கையை மாற்றுகின்ற துணை கிடைத்தால் வாழ்க்கை வரம்

அமைதியாய் இருப்பவன் முட்டாள் என்று எண்ணிவிடாதே.. பேசுபவனை விட கேட்பவனே புத்திசாலி..

வாழ்க்கை என்பது ஒரு ரயில் பயணம் போல தான்.... நிறைய நிறுத்தங்கள்... நிறைய வழித் தடம் மாற்றங்கள்... விதவிதமான மனிதர்களுடன் பயணங்கள்....! சில நேரம் விபத்துக்களும் கூட... அனைத்தையும் ரசித்துக் கொண்டே பயணிக்க கற்றுக் கொள்வோம்.... வாழ்விலும் கூட, அழகாய் அமையட்டும் இந்து வாழ்க்கை பயணம்...

கோபமாய் பேசினால் குணத்தை இழப்பாய்! வேகமாய் பேசினால் அர்த்தத்தை இழப்பாய்! வெட்டியாய் பேசினால் வேலையை இழப்பாய்! அதிகமாகப் பேசினால் அமைதியை இழப்பாய்! ஆணவமாய் பேசினால் அன்பை இழப்பாய்! சிந்தித்து பேசினால் சிறப்போடு வாழ்வாய்!!!

இழந்த இடத்தை பிடித்துக் கொள்ளலாம்...... இழந்த காலத்தை ஒருபோதும் பிடிக்க முடியாது...!

உன்னிடம் மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிக்கொணரும் வழி விடா முயற்சியும், தொடர்ந்த உழைப்புமே ஆகும்; வலிமையோ, புத்திசாலித்தனமோ அல்ல.

உனக்கு இன்று ஏற்பட்ட துன்பங்களுக்காக மனம் வருந்தாதே ஏனெனில் அது தான் உனக்கு வருங்காலத்தில் எதையும் தாங்கும் இதயத்தை அளிக்கப் போகிறது

அடுத்தவர் ஆயிரம் வழிகளில் வாழலாம் ஆனால் உனக்கென சிறந்த வழியை நீ தேர்ந்தெடுக்கும் வரையிலும் வெற்றி என்பது உனக்கு ஒரு கிடைக்காத பொக்கிஷமே

உன்னையே நீ நம்பு ஓர் நாள் உயர்வு நிச்சயம்...!

பிரச்சனையே வயிறு தான்! பாதி பேர் குறைக்க ஓடிக் கொண்டிருக்கிறார்கள்! பாதி பேர் நிறைக்க ஓடிக் கொண்டிருக்கிறார்கள்!

நிஜத்தின் வலியில் கற்பனை எல்லாம் இறந்து போனது

சின்ன சின்ன மகிழ்ச்சியில் சொர்க்கமுண்டு சின்ன சின்னதாய் இருப்பதனாலோ பல பேருக்கு அது தெரியாமல் போவதுண்டு

நீ நடந்து போக பாதை இல்லையே என்று கவலைப்படாதே, நீ நடந்தால் அதுவே ஒரு பாதை.

வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும் நமக்கு ஏதோ ஒன்றை கற்பித்து விட்டு தான் செல்கிறார்கள்

ஒன்று நடந்தேதான் தரும் என்றால் அதில் கவலைப்பட என்ன இருக்கிறது

எந்த தவறை நீ எங்கு கண்டாலும் அதை உன்னிடம் திருத்திக்கொள்

கதவை தட்டாத காரணத்தால் எத்தனையோ வாய்ப்புகளை இழக்க நேரிடுகிறது.

இனிதாய் தொடர்ந்த இன்பப் பயணத்தில் இடையில் தோல்வி என்னும் பாதை வரலாம் தடைக் கற்களும் உன்னால் செதுக்கப்பட வேண்டும் வெற்றிப் படிக்கற்களாக

பாசம் வையுங்கள் தவறில்லை .... ஆனால் பைத்தியம் ஆகி - விடாதீர்கள்.... ஏனெனில் இங்கு முடிவே இல்லாத வாழ்வும் இல்லை ... பிரிவே இல்லாத உறவும் இல்லை .... எல்லாம் சில காலம் தான்...

ஒன்றைப் பெற வேண்டும் என்று நினைத்துவிட்டால் இறுதி வரைக்கும் போராடு. விளைவுகளையோ, அதில் ஏற்படும் தோல்வி பற்றியோ கூட கவலைப்படாதே..!

நீங்கள் புதிதாக ஒன்றை முயற்சிக்கும்போது "நீ ஒரு முட்டாள்" என்ற வார்த்தையை அதிகம் எதிர்கொள்ள தயாராகுங்கள்.

ஒருவரை உண்மையாக நேசித்தால் சொல்லாதீர்கள், செயலில் காட்டுங்கள்.... உண்மையாக வெறுத்தால் சொல்லி விடுங்கள். செயலில் காட்டாதீர்கள்....

தோல்வி என்பது ஒரு வார்த்தைதானே தவிர நம் வாழ்க்கை அல்ல கண்ணீரை துடை தோல்விகளை உடை வெற்றியோடு எழுந்து போடு நடை !!

ஒருவரை முழுமையாக அறியாமல்... உங்கள் மனதையோ மானத்தையோ இழந்து விடாதீர் பின் கலங்கி நிற்பது கண்களும் மனதும் மட்டுமல்ல உங்கள் வாழ்க்கையும் தான்

விட்டுக்கொடுங்கள் விருப்பம் நிறைவேறும் தட்டிக் கொடுங்கள் தவறுகள் குறையும் மனம் விட்டு பேசுங்கள் அன்பு பெருகும்.

புரிதல் இருக்கும் இடத்தில் ஆணவத்திற்கு வேலை இல்லை.... புரிதல் இருக்கும் இடத்தில் அடுத்தவர் ஆலோசனை தேவையில்லை..... புரிதல் இருக்கும் இடத்தில் நீயா நானா என்ற போட்டியில்லை .... புரிதல் இருக்கும் இடத்தில் பிரிவிற்கு இடமே இல்லை... புரிதலில் தான் அன்பு அழகாய் மலர்கிறது

சிலர் பணத்தை சேமிப்பதற்காக சந்தோசத்தை வெறுக்கிறார்கள், பிறகு சந்தோசத்தைப் பெற பணத்தை இழக்கிறார்கள். கடைசியில் இரண்டுமே அவர்களுக்கு மிஞ்சுவதில்லை

பிறக்கும் போது தனிமையின் கருவறை.... இறக்கும்போது அமைதியின் கல்லறை.... இடையில் மட்டும் ஏன் இத்தனை இதயம் வலிக்கும் உறவுமுறை...

செய்ய முடியும் என்று நம்பு ஒன்றைச் செய்ய முடியும் என்று நீ முழுதாய் நம்பும்போது, உன் மனம் அதைச் செய்து முடிக்கும் வழிகளைக் கண்டறியும், ஒரு காரியத்தில் வைக்கும் நம்பிக்கை அந்தக் காரியத்தை முடிக்கும் வழியையும் காட்டுகிறது.

ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை . முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.

ஏதாவது ஒன்றை சிறிது நேரம் கழித்துச் செய்ய வேண்டியது இருந்தால், அதை இப்போதே செய்ய முடியுமா என்று பார், நாளை செய்ய வேண்டியதை இன்றே செய்ய முடியுமா என்று பார். இப்படிச் செய்தால், அறுபது வருட வாழ்க்கையை, உள்கால் இருபது வருடங்களில் வாழ்ந்து விட முடியும்.

மனதில் ஓர் உறுதி, வெளியில் சரியான சூழ்நிலை இரண்டையும் உருவாக்கினால், ஆசைப்பட்டதை தள்ளிப் போடாமல் செய்து முடிக்கும் பலம் தானாக வந்துவிடும்.

வாழ்க்கையை வெளியேயிருந்து வேதனையோடு வேடிக்கை பார்ப்பதை நிறுத்துங்கள். சுமைகளைக் களைந்துவிட்டு, ரசித்து வாழ்ந்து பாருங்கள். பிறகு வாழ்க்கை உங்களை இளமையோடு வைத்திருக்கும்.

Thanks for spending time reading the Best Tamil Quotes About Life. If you do like Tamil quotes, share them with your friends. For any correction or suggestion, kindly contact us by clicking here. Check out the similar quotes below.  

Related Quotes