Best Tamil Quotes

Best Tamil Quotes

The Reviewed Link for the Best Tamil Quotes is below. If you like our quotes, Kindly share them with your friends and family. Follow us on social media to get high-quality image quotes. Our social media links are given in the footer. 

 

நிஜத்திலும், நினைவுகளிலும் தான் வித்தியாசம் தவிர வாழ்கின்ற வாழ்க்கையில் இல்லை.....

எதையும் இழக்காமல் இந்த உலகத்தில் எதுவும் வளருவதில்லை.

வலியது தான் உயிர் பிழைக்கும், இது வரையில் இயற்கையின் விதி அது தான்...!

தேவை முடிந்ததும், நண்பன் துரோகி ஆகிறான். தேவை தொடங்கும்போது, துரோகி நண்பன் ஆகிறான். இதுதான் உலகம். எவர் தேவைக்கும் நீ பொருள் ஆகாதே.

ஓர் உறவு தனக்கு முக்கியம் என நினைத்திருந்தால், அவ்வுறவின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க தவறி இருக்க மாட்டார்கள் தானே..!!!

எனக்காக ஒரு உதவி செய்வாயா...??? நீ உடைத்த என் இதயத்திற்கு நீயே சொல்லிவிடு நீ என்னுடன் பழகியது ஒரு பொய் நாடகமே என்று..!

பொறுமையே இல்லாதவன் கூட ஒரு குழந்தைக்கு தகப்பனாக முடியும். ஆனால் பொறுப்புள்ளவன் தான் ஒரு தந்தையாக முடியும்.

மத்தவங்க பொறாமை படுற அளவுக்கு வாழனும்னு அவசியம் இல்ல... பெத்தவங்க பெருமை படுற அளவுக்கு வாழ்ந்தாலே போதும்..!

வெறும் வளர்ச்சி எவரையும் மனிதனாக்குவதில்லை சிந்தனைதான் மனிதனை உருவாக்குகிறது.

இந்த உலகமே உன்னை திரும்பி பார்க்க வேண்டுமென்றால் நீ யாரையும் திரும்பி பார்க்காதே

பல காயங்களுக்கு கண்ணீர் மருந்து சில காயங்களுக்கு பிரிவு மருந்து எல்லா காயங்களுக்கும் சிறந்த மருந்து அமைதி...

மண்ணில் பூத்த மலரை மணமுள்ளவரை சுவாசி... உன் மனதில் பூத்த சிலரை உயிருள்ளவரை நேசி...

நாளை என்பது நம் கையில் இல்லை நம்பிக்கையில் உள்ளது நம்பிக்கையோடு தூங்குங்க எதுவும் கடந்து போகும். அன்புடன்..

உன் கோபமும் உன் மௌனமும் உன்னை பாதிக்காது.... ஆனால்... உன்னை பிடித்தவர்களை பாதிக்கும்... என்பதை மறந்துவிடாதே..!

நமக்கு ரொம்பப் பிடித்த ஒரு உறவை ..... சேரவும் முடியாமல் யாருக்கும் விட்டுக் கொடுக்கவும் முடியாமல் தவிக்கின்ற நொடி தான் உலகத்தில் மிகவும் கொடியது

வெற்றிக்கும் தோல்விக்கும் சிறு வித்தியாசம்தான் கடமையை செய்தல் வெற்றி கடமைக்கு செய்தல் தோல்வி.

ஒவ்வொரு நிமிடமும் சந்தோஷமாக இருக்க முடியும்...! வருவது வரட்டும் வாழ்ந்து காட்டுவோம் என்ற மன உறுதியில் நீங்கள் இருந்தால்..

போலியாக பேசுவது பிடிக்காது பொய்யாக பேசுவதும் பிடிக்காது நான் நானாக இருப்பதால் என்னவோ என்னை பலருக்கு பிடிக்காது - - இப்படிக்கு மனசாட்சி

முயலும் வெல்லும் ஆமையும் வெல்லும் ஆனால் முயலாமை என்றும் வெல்லாது...

ஆமையை ரோட்டில் விட்டு அதன் வேகத்தை குறை கூறுவது பழக்கம் அதை நீரில் விட்டால் நம்மால் தான் பிடிக்க முடியுமா. . ? இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் எவனும் வல்லவனே..!

சோதிப்பது காலமாக இருந்தாலும்.. சாதிப்பது நீங்களாக இருங்கள்..

தளராத இதயம் உள்ளவனுக்கு இவ்வுலகில் முடியாதது என்று எதுவும் இல்லை !

அன்பை விரும்ப தெரியாதவங்களா கூட இருங்கள் - ஆனா தயவு செய்து விரும்பி விட்டு விலக தெரிஞ்சவங்களா மட்டும் இருக்காதிங்க !!!

ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமை அல்ல. விழுந்த போதெல்லாம் எழுந்தான் என்பது தான் பெருமை

ஒரு காரியத்தை முயன்று பார்க்காமலேயே என்னால் அது முடியாது என முடங்கிப் போவான் கோழை....

புத்தகம் என்பது.... தொட்டுப் பார்த்தால் வெறும் காகிதம்...! தொடர்ந்து படித்தால் அதுவே பேராயுதம்..!

போலியான பேச்சின் மூலம் நல்லவன் என்ற பெயரை பெறுவதை விட, வெளிப்படையான பேச்சில் கெட்டவனாய் பெயர் சூட்டப்பட்டாலும் நீ உத்தமனே.

இரும்பின் துரு இரும்பையே அழிந்துவிடும். நீங்கள் இரும்பாக இருக்கலாம் சிந்தனையில் துரு ஏறாமல் பார்த்துக்கொள்ளுங்கள் !

வாய்ப்பும், வசதியும் சூழ்நிலையும் கிடைத்தும் தவறு செய்யாதவன் தான் உண்மையான உத்தமன்

உன்னால் முடியும் என்று எண்ணுவதையோ அல்லது முடியும் என்று கனவு காண்பதையோ துணிந்து தொடங்கு, உனது துணிவிலேயே அறிவும், ஆற்றலும், மந்திரமும் அடங்கியுள்ளன.

நம்பிக்கை இழந்தவன் வெல்வது கடினம் நம்பிக்கையோடு இருப்பவன் தான் வீழ்வது கடினம்

சோர்வடைந்து விடாதே வாழ்க்கை நீ எதிர்பார்க்காத நேரத்தில் தான் பல ஆச்சர்யங்களை கொண்டு வரும்

தாய் என்னும் தீபம் இந்த உலகில் சுடர் விட்டு எரிவதால் தான் பாசம் எனும் ஒளி இந்த உலகில் இன்னமும் மின்னி வருகிறது.

காலம் போடும் கணக்கை கடவுளை தவிர வேறு யாரறிய முடியும்.. கடமையை செய்... கடவுளை நினை... நடப்பதெல்லாம் நன்மைக்கே!

நீ யாரென்று நீயே அறிய வேண்டுமானால் ஒரு நண்பனை வளர்த்துக்கொள். நீ யாரென்று உலகமே அறிய வேண்டுமானால் ஒரு எதிரியை வளர்த்துக்கொள்.

மழலைகளிடம் தோற்றுப்போகும் போது ஏற்படும் சந்தோஷத்தை, எதிரிகளிடம் பெறும் வெற்றி கூட தந்து விடுவதில்லை .....

யோசிப்பதானால் ஆழமாக யோசியுங்கள். செயல்படுத்துவதானால் தீவிரமாக செயல்படுத்துங்கள். விட்டுக்கொடுப்பதானால் பெருந்தன்மையோடு விட்டுக்கொடுங்கள்... எதிர்ப்பதானால் கடைசிவரை எதிர்த்துக் கொண்டிருங்கள்.

நாம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் எல்லாவற்றையும் மாற்ற முடியாது... எதையும் எதிர்நோக்க விடில் மாற்றங்களே இருக்காது...

பேச நேரம் இல்லை என்றால் நம்பாதீர்கள் அவர்களின் முன்னுரிமை பட்டியலில் நீங்கள் இல்லை என்பதே உண்மை ..

என் ஆயுள் முழுவதும்.. உன் நட்பு நீடிக்க வேண்டும்..!! இல்லையெனில் ..... உன் நட்பு உள்ளவரை என் ஆயுள் இருக்க வேண்டும்..!!

உங்கள் குரலை இரக்கத்துக்காகவும் உங்கள் காதுகளைக் கருணைக்காகவும் உங்க கைகளைக் கொடைக்காகவும் உங்கள் மனதை உண்மைக்காகவும் பயன்படுத்துங்கள்

கவலைகள் ஒருபோதும் வெற்றியைத் தருவதில்லை .... முயற்சிகளே !

முடிவே இல்லாத பாதையில் பயணம் செய்கிறேன்.. முடிவில் நீ இருப்பாய் என்ற நம்பிக்கையில்....

எல்லாப் பறவைகளும் மழைக் காலங்களில் கூடுகளில் அடையும்..!! ஆனால் கழுகு மழையைத் தவிர்க்க மேகத்துக்கு மேலாகப் பறக்கும்...!! நீ கழுகாக இரு....

தன்னை நல்லவராக காட்டிக் கொள்ள அடுத்தவரை கெட்டவராகச் சித்தரிக்கும் எவரும் நீண்ட நாள் நல்லவர் வேடத்தில் வாழமுடியாது...

Thanks for spending time reading the Best Tamil Quotes. If you do like Tamil quotes, share them with your friends. For any correction or suggestion, kindly contact us by clicking here. Check out the similar quotes below.  

Related Quotes