The Reviewed Link for the Education Quotes in Tamil is below. If you like our quotes, Kindly share them with your friends and family. Follow us on social media to get high-quality image quotes. Our social media links are given in the footer.
வலிகள் இல்லாமல் வழிகள் இல்லை விழிகள் மூடினால் வெற்றிகள் இல்லை. முயற்சி இல்லாமல் மகிழ்ச்சி இல்லை. முயன்ற மனிதன் தோற்றது இல்லை. கோபம் கொண்டால் உறவு இல்லை. பாவம் செய்தால் பரிவு இல்லை ஆசை கொண்டால் உறக்கம் இல்லை அமைதி கொண்டால் அகிம்சையே எல்லை அழ துணிந்தால் வானமே எல்லை
கணிதம் சந்தோசத்தை கூட்டவோ
கவலையைக் கழிக்கவோ நமக்குக் கற்றுத் தருவதில்லை...
ஆனால் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு
உண்டு என்பதை கற்றுத் தருகின்றது..!
கதவை தட்டாத காரணத்தால் எத்தனையோ வாய்ப்புகளை இழக்க நேரிடுகிறது.
புத்தகங்கள் இல்லையென்றால் சரித்திரம் மௌனமாகிவிடும். இலக்கியம் ஊமையாகிப்போகும். புத்தகம் என்பது மனித குலமே அச்சு வடிவில் இருப்பது போல.
கவலைகள் ஒருபோதும் வெற்றியைத் தருவதில்லை... முயற்சிகளே!
கல்வி என்னைக் கரை மட்டும் சேர்க்கவில்லை; நிலவு வரை சென்று சேர்த்திருக்கிறது. அரசுப் பள்ளியில், தமிழ் வழியில் படித்துத்தான் முன்னேறி இருக்கிறேன். தமிழ் எனக்குத் தடையாக இருந்தது இல்லை ; படியாகவே இருக்கிறது. தமிழால் முடியும்; தமிழரால் முடியும்
தலை குனிந்து என்னை பார் தலை நிமிர்ந்து உன்னை நடக்க வைக்கின்றேன்
உங்களின் தோல்வி எங்கே ஒளிந்துள்ளது தெரியுமா? பிரச்சினைகள் வரும்போது அல்ல, பிரச்சனைகளை கண்டு நீங்கள் பயந்து விலகும்போது.
இடைவிடாமல் சிந்திக்கவும், உறுதியாக நிற்கவும் தகுதியுடையவனாகவுள்ள எவனொருவனும் தன்னையறியாமலேயே மேதையாகிவிடுகிறான்
சிந்திக்காமல் படித்தால் அந்தப் படிப்பு வீண், படிக்காமல் சிந்தித்தால் அந்த வாழ்க்கையே வீண்
வாழ்க்கையில் கற்றுக்கொள்வதில் குழந்தை போல் இரு.. அதற்கு அவமானம் தெரியாது... விழுந்தவுடன் அழுது முடித்து திரும்பவும் எழுந்து நடக்கும்...
இந்த உலகத்தையே மாற்றக் கூடிய சக்தி வாய்ந்த கருவி கல்வி தான். அக்கல்வியை பெற்று சிறப்போடு வாழ வாழ்த்துக்கள்....
தளராத இதயம் உள்ளவனுக்கு இவ்வுலகில் முடியாதது என்று எதுவுமே இல்லை
தோல்விகள் என்பது உன்னை தூங்க வைக்க பாடும் தாலாட்டு அல்ல நீ நிமிர்ந்து நிற்பதற்கான தேசிய கீதம்
கல்வி மனிதனை எந்த பேதமில்லாமல் மனிதானகவே பார்க்க வைக்கும் அறிவு கண்கள்
எட்டி விடும் தூரத்தில் வெற்றியும் இல்லை! அதை விட்டு விடும் எண்ணத்தில் நானும் இல்லை !
கிராமத்தில் இருந்தாலும், நகரத்தில் இருந்தாலும், படித்த குடும்பத்தில் இருந்து வந்தாலும், படிக்காத குடும்பத்தில் இருந்து வந்தாலும் உங்களால் வெற்றியடைய முடியும். நீ யாராக இருந்தாலும் உழைப்பால், அறிவால் வெற்றியடைவாய்.
கல்வி கற்காத பெற்றோர் இருந்த போது கல்வி கற்கும் பிள்ளைகள் உருவானார்கள்.... கல்வி கற்ற பெற்றோர் இருக்கையில் கல்வி கற்க விருப்பமற்ற மாணவர்கள் உருவாகியுள்ளனர்....
உங்கள் முதல் வெற்றிக்கு பிறகு ஓய்வெடுத்து விடாதீர்கள், ஒருவேளை அடுத்த முறை தோற்றுவிட்டால், உங்களுடைய முதல் வெற்றி அதிர்ஷ்டத்தால் கிடைத்தது என்ற சொல்ல பல நாக்குகள் காத்திருக்கின்றன
வெற்றிக் கதைகளைப் படிக்க வேண்டாம், அதிலிருந்து ஒரே ஒரு செய்தியை மட்டுமே பெறுவீர்கள், தோல்வி கதைகளைப் படியுங்கள், அது வெற்றி பெறுவதற்கான உதவிக்குறிப்புகளைத் தரும்.
கடவுளுக்கு செலுத்தும் காணிக்கையை உன் பிள்ளைகளின் கல்விக்கு செலுத்து, அது உனக்கு பயன்தரும்
முதல் முயற்சி தோல்வி என்றால் என்ன மீண்டும் மீண்டும் முயற்சி செய்யுங்கள் தோல்வியை வென்றுவிடலாம் வெற்றியால்....
வெல்வோம், சாதிப்போம், வேதனைகளைத் துடைத்தெறிவோம் எந்தை அருளால் எதுவும் வசமாகும்.
நான் எதையும் சாதிக்க வல்லவன்" என்று சொல், நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம் கூட சக்தியற்றது ஆகிவிடும்
வயிற்றுக்குச் சோறிட வேண்டும் - இங்கு
வாழும் மனிதருக் கெல்லாம்;
பயிற்றிப் பலகல்வி தந்து - இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும்
ஒரு காலத்தில் சந்தோஷப் பறவைகளும் நட்பு பறவைகளும் குடியிருந்த நினைவுக்கூடு… பள்ளிக்கூடம்
கனவு காணுங்கள் ஆனால் கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல உன்னைத் துாங்க விடாமல் பண்ணுவது ஏதுவோ அதுவே (இலட்சிய) கனவு
துணிவு மிக்க மனிதர்களுக்கு அதிர்ஷ்டம் எப்போதும் அருகிலேயே இருக்கும்..
நாம் உலகில் பார்க்க விரும்பும் மாற்றம் முதலில் நம்மிடம் நிகழ வேண்டும்
வெகு அதிகமாகப் படித்து தன் மூளையையும் குறைவாக பயன்படுத்துபவன் சிந்தனை என்ற சோம்பேறித்தனத்திற்கு சென்றிடுவான்.
சுமையில்லா புத்தகப்பை வேண்டும் சுவையான பாடங்கள் வேண்டும் அடிக்காத ஆசிரியர் வேண்டும் செடியோடு பேச வேண்டும் துள்ளி விளையாட வேண்டும் பள்ளிக்கு போகணும்னா சந்தோஷம் மலர வேண்டும்
ஒரு பெண்ணுக்கு கல்வி புகட்டுவது ஒரு குடும்பத்திற்கே கல்வி தருவதாகும்.
நாம் அனைவருக்கும் ஒரே மாதிரி திறமை இல்லாமல் இருக்கலாம் ஆனால் அனைவருக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள ஒரே மாதிரி வாய்ப்புகள் உள்ளன
கல்வி பெருமைக்காகத் தேடிப் பெறுவது அல்ல.. - பெற்றதைக் கொண்டு பெருமைத் தேடிக் கொள்வது..
வெறும் புத்தகங்களைப் படிப்பதால் மனிதன் வறட்சி அடைகிறான். படித்தவன் யார்? துளியளவாவது அன்பை உணர்பவனே படித்தவன். கடவுளே அன்பு. அன்பே கடவுள், கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார்.
Thanks for spending time reading the Education Quotes in Tamil. If you do like Tamil quotes, share them with your friends. For any correction or suggestion, kindly contact us by clicking here. Check out the similar quotes below.