Happy Birthday Tamil Quotes

Happy Birthday Tamil Quotes

The Reviewed Link for the Happy Birthday Tamil Quotes is below. If you like our quotes, Kindly share them with your friends and family. Follow us on social media to get high-quality image quotes. Our social media links are given in the footer. 

மகிழ்வான தருணங்கள் மலரட்டும் இனிமையாக.. நெகிழ்வான நேசங்கள் நிகழட்டும் இளமையாக... இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

வந்த கஷ்டங்கள் எல்லாம் பனி போல தூர விலகி மகிழ்ச்சி என்ற ஒன்றின் ஒளிவீசி தித்திக்கும். எதிர்காலம் சிறப்பாக அமைய உன் பிறந்த நாளில் மனதார வாழ்த்துக்குறேன்.

பூவினம் சேராத பூவொன்று பூமியில் பூத்த நாள் இன்று வானம் சேராத நிலவொன்று மண்ணில் உதித்த நாள் இன்று

பிறப்பு என்பது அழகான விபத்து இறப்பு என்பது ஆபத்தான விபத்து இரண்டுக்குமிடையில் சில நாள் வாழ்க்கை இன்றுமொருமுறை பிறக்கவும் இறக்கவும் அஞ்சாதே.. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

வருடத்தில் பல வண்ணங்கள் மலரும் விடியலில் பிறந்தாயோ காற்றால் மலர்களை உதிர்த்து மழைத்துளியில் வெண்பகலை அழைத்து இநயந்தால் உன்னை வாழ்த்துகிறேன்

வாழ்க்கை என்ற கடலில் மகிழ்ச்சி என்ற படகில் வாழ்நாளெல்லாம் பவனி வந்து வளம் பல பெற்று வாழ்க நீடும் வளர்க வையத்தில் நின் புகழ் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

உனக்கு வாழ்த்து சொல்ல புதிதாய் பிறந்தது நீயா இல்லை நானா? உன்னை வாழ்த்த புதிதாய் யோசித்து, யோசித்து நானே புதியதாய் மாறிப்போனேன். யோசித்து யோசித்தும் பிறக்கவில்லை கவிதை? புதியதாய் இன்று பிறந்த நீயே கவிதைதானே எனக்கு.

பிறந்தநாள் மட்டுமல்ல நீ என்னுள் பிறந்த நாளையும் கொண்டாடுவேன் நான்....

சிறப்பான என் கணவருக்கு என்னுடைய இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

குறிஞ்சி பூப்பது 12 வருடத்திற்கு ஒரு முறையாம்.. யார் சொன்னது ஆண்டுக்கு ஒரு முறை பூக்கிறது... அது உன் பிறந்த நாள்.. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

ஒளிக்கை நீட்டி வாழ்க்கை காட்டிய வசந்த நாள் நீ பிறந்த நாள்

வாழ்க்கையில் நாம் பிறந்ததை அடையாளம் காட்டும் மிக சிறந்த நாளே "பிறந்த நாள்"

நிலவை கொண்டு வந்து உன்னிடம் நான் தந்தாலும் அதன் பெறுமதி குறைவே உன்னை கட்டியனைத்து அன்பாய் பேசும் வார்த்தைகள் பல்லாண்டு வாழச்செய்யும்

உங்களை பற்றி ஒன்றும் தெரியாமல் மணவறைக்குள் அமர்ந்தேன், இன்று உங்களை பற்றி முழுவதும் புரிய வைத்து என் இல்லறத்தை அழகாக்கி விட்டீர்கள், என் சார்பில் இனிய பிறந்த தின வாழ்த்துக்கள் என் ஆசை நாயகனுக்கு

காலங்கள் கடந்து நீ ஒரு மூலை நான் ஒரு மூலை என்று இருந்தாலும் நம் சொந்தம் எனும் பந்தத்திற்கு என்றுமே அழிவு இல்லை . என் பணிவான பிறந்த தின வாழ்த்துக்கள் என் சகோதரனே.

கண்களுக்கு என்றுமே மனதின் மொழி புரியும். அதனால் தான் என்னவோ என்னை உன்னிடம் சேர்த்து உன்னவளின் உனக்கான பிறந்த தின நல்வாழ்த்துக்கள்

அனைத்து குறைகளும் இன்று நிறைகளாகி போயின நீ பிறந்த போது. என் தேவதை என்றுமே என் மனதின் மஹாராணி தான் வாழ்த்துக்கள் மகளே

யாரென்று அறியாது உரிமையாய் பழகினோம். இன்னார் என்று தெரியாது உண்மையாய், இருந்தோம். என்றுமே நம்முடைய நல்லுறவு நீடிக்க வேண்டி உன் பிறந்த தினத்தில் இறைவனிடம் வேண்டுகிறேன்

நம் இருவரின் கண்ணீரை பார்க்கும், இறைவனின் இதயம் கூட உருகும் நம் பிரிவை எண்ணி. இந்நாளில் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

உன் பிறந்தநாளின் சிறந்த பரிசுப்பொருள் உன் காதல் தீபம் ஏற்றிய என் இதயமாக தான் இருக்கும்..!!

புத்தம் புது நாள் புத்தம் புது வருடம் புத்தம் புது வாழ்க்கை எல்லா சோகம்களும் கஷ்டங்களும் கரைந்துவிட இனி உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்குவதற்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

உன்னை சந்தித்த பிறகு என் ஒவ்வொரு பிறந்தநாளும் பரிசாக உன்னை மட்டுமே எதிர்பார்க்கிறது....... நீயோ .. மலர் கொத்து தருகிறாய்....

உன் பிறந்தநாளில் வாழ்த்து அட்டைகளில் வாழ்த்துச் சொல்லி உன் வீட்டு அலமாரியில் ஒளிந்து கொள்ள ஆசையில்லை எனக்கு.... உன் இதயத்தில் வாழ ஆசைப்படுகிறேன்!!!

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

அன்பே எனக்கு வரம் ஒன்று கிடைத்தால் உன் பிறந்த நாளையே வருடத்தின் முதல் நாளாக அறிவிக்க ஆசை இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

பிறப்பின் நொடிகள் என்றும் அழகானது. அதை மீண்டும் காலத்தின் நகர்வால் அடையும் போது வாழ்த்துக்கள் அழகானது

என்னில் கலந்து இருந்த கவிதையே உன்னை என் வரிகள் வாழ்த்தும் இன்று போல் என்றும் மகிழ்ச்சி பொங்க உன்னை என் இதயம் வாழ்த்தும் இதயம் கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

Thanks for spending time reading the Happy Birthday Tamil Quotes. If you do like Tamil quotes, share them with your friends. For any correction or suggestion, kindly contact us by clicking here. Check out the similar quotes below.  

Related Quotes