Inspirational Tamil Quotes

Inspirational Tamil Quotes

The Reviewed Link for the Inspirational Tamil Quotes is below. If you like our quotes, Kindly share them with your friends and family. Follow us on social media to get high-quality image quotes. Our social media links are given in the footer. 

இன்னாரை போல் வாழ வேண்டும் என்று நாம் நினைப்பதை விட, நம்மை போல வாழ வேண்டும் என்று பிறர் என்னும் அளவிற்கு நம் வாழ்ந்து காட்டுவதே சிறப்பு...

உன் முன் எவருமில்லை என்று உன் கருத்தை உரக்கச் சொல்.

விழுவதெல்லாம் எழுவதற்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..

வெறும் வளர்ச்சி எவரையும் மனிதனாக்குவதில்லை, சிந்தனைதான் மனிதனை உருவாக்குகிறது..

சரியான இடத்தில் உங்கள் கால்களை வைத்துள்ளீர்களா... என்பதை முதலில் உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்... பிறகு உறுதியாக நில்லுங்கள்..!!!

மலை போன்ற சகிப்புத்தன்மை, இடைவிடாத முயற்சி, எல்லையற்ற நம்பிக்கை இவைதாம் நற்காரியத்தில் வெற்றி தரும்..

உன்னை மதிப்பவரிடம் தாழ்ந்து பேசனும்! உன்னை மிதிப்பவரிடம் வாழ்ந்து பேசணும் !!

தாழ்ந்த லட்சியத்தில் வெற்றி பெறுவதை விட, உயர்ந்த லட்சியத்தில் தோல்வி பெறுவதே மேல்..

உன் திறமையை வெளிகாட்டு, உலகம் உன்னை கண்டறியும்.

ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை, முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.

பல தோல்விகளை சந்தித்தேன் வெற்றி கிடைத்த போது ஒவ்வொரு தோல்வியும் வெற்றி என அறிந்து கொண்டேன்...

பத்தாவது முறையாகக் கீழே விழுந்தவனைப் பார்த்து, பூமி முத்தமிட்டு சொன்னது...!! "நீ ஒன்பது முறை எழுந்தவன்" என்று...!!

வெற்றி ஒரு போதும் இறுதி அல்ல, தோல்வி ஒருபோதும் உறுதி அல்ல.

ஒரு நொடி துணிந்தால் இறந்துவிடலாம். ஒவ்வொரு நொடியும் துணிந்தால் நாம் ஜெயித்து விடலாம்.

கரையும் மெழுகில் இருளை கடந்துவிடமுடியும் என்ற நம்பிக்கை வாழ்க்கையிலும் இருக்கட்டும்...

எப்போதும் என் அடையாளத்தை யாருக்காகவும் விட்டு கொடுக்க மாட்டேன்...

எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவை எண்ணல் வேண்டும்

- மகாகவி பாரதியார்

சகித்துக் கொண்டே போகும் வரை நமக்கு மரியாதை கிடைக்காது. பேச வேண்டிய இடத்தில் கட்டாயம் பேசி விடுங்கள்...!

நீ பிறந்தது வெற்றி மேல் வெற்றி பெறுவதற்கே; தோல்வியுற அல்ல, அப்படியே உன்னைத் தோல்வி வந்து அணைத்தாலும், அந்தத் தோல்வியும் ஒரு தற்காலிகத் தடையே, உனது தன்னம்பிக்கையே அந்தத் தடைகளைத் தகர்த்தெறியும்.

உன்னால் முடிந்த வரையில் உன் பணியினை இன்று நன்றாகச் செய். நாளை அதனினும் நன்றாகச் செய்யும் ஆற்றலை நீ பெறக்கூடும்.

உங்களை நீங்களே மிஞ்ச வேண்டும், இதுவே உங்களின் வேலையாக இருக்கட்டும்.

கஷ்டத்தை நீ நன்கு கவனித்துப் பார் அதில் துணிச்சல் தென்படும். அதைப் புரிந்துகொண்டால், துணிசல் என்பது நீ அணியும் ஆடையாக உன்னை அலங்கரிக்கும்!

- சுவாமி விவேகானந்தர்

மனதில் எழும் எண்ணங்களை கவனி, அதன் ஆழத்தை உணர் அதை அங்கேயே திருத்து உனக்கான மாற்றம் உன்னுள் நிகழும்.

ஓடுவதாக இருந்தால் துரத்திக்கொண்டு ஒருங்கள்.. நிற்பதாக இருந்தால் எதிர்த்து நில்லுங்கள்..!

உங்களை கீழே தள்ளிவிடுவதில் மற்றவர்கள் வலிமையானவர்கள் என நிரூபித்தால், கீழே விழுந்தாலும் எழுந்து நிற்பதில் நீங்கள் வலிமையானவர்கள் என நிரூபியுங்கள்!

வாழ்க்கையை வெறுக்க ஆயிரம் காரணங்கள் இருந்தாலும், வாழ்வதற்கு ஒரே காரணம், நாளை எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை மட்டும் தான்..

நேரத்தை வீணாக்கும் பொழுது கடிகாரத்தை பார், ஓடுவது முள் அல்ல, உன் வாழ்க்கை.

பின்னோக்கி பார்ப்பதில் உறவுகள் வேதனைகளை கொடுக்கலாம்.... ஆனால் நட்பில் பின்னோக்கி பார்த்தல் சந்தோசத்தையே கொடுக்கும்!

தனித்திரு... அதுவே உன் தனித்திமிர்....

பார்க்கக் கண்களைக் கொடுத்த ஆண்டவன், பாராதிருக்க இமைகளையும் கொடுத்திருக்கிறான். இரண்டையும் சரியான சமயத்தில் பயன்படுத்துபவனே புத்திசாலி...

விழுந்தால் அழாதே.. எழுந்திரு..

உயர உயரத்தான் நமக்கு மேல் எத்தனை பேர் உள்ளனர் என்பது புரியும்! உயர்ந்து விட்டோம் என்று ஒரு போதும் எண்ணி விடாதே....!!

நீ வெற்றியடைந்துவிடுவாயோ, என உன் எதிரிகள் உன் மீது நம்பிக்கை வைப்பதால் தான் உனக்கு தடைகளை தருகின்றனர். அவர்களே உன் மீது இவ்வளவு நம்பிக்கை கொள்ளும் போது, நீ உன் மீது நம்பிக்கையை இழக்க போகிறாயா?

வெற்றி எனும் வேட்கை உன்னுள் இருக்கும் வரை தோல்வி எனும் தடைகள் உன் கண் முன்னே காணப்படுவது இல்லை.

இறைவா! எனக்கு ஏன் இத்தனைச் சோதனை என்று புலம்பாதே, மரத்திற்குகூட கோடையை வைத்தவன் வசந்தத்தையும் வைத்திருக்கும்போது உன்னை மட்டும் நிரந்தரத் துன்பத்தில் விட்டுவிடுவானா!

லட்சியம் இருக்குமிடத்தில் அலட்சியம் இருக்காது...

கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி வெற்றி கனியை எட்டுபவனே சிறந்த சாமர்த்தியசாலி ஆகிறான்...

வாழ்க்கையை வெளியேயிருந்து வேதனையோடு வேடிக்கை பார்ப்பதை நிறுத்துங்கள். சுமைகளைக் களைந்துவிட்டு, ருசித்து வாழ்ந்து பாருங்கள். பிறகு வாழ்க்கை உங்களை இளமையோடு வைத்திருக்கும்.

நீங்கள் ஒரு கனவு காணும்போது, அதைப் பிடிக்க வேண்டும், ஒருபோதும் விடக்கூடாது..

தளராத இதயம் உள்ளவனுக்கு இவ்வுலகில் முடியாதது என்று எதுவும் இல்லை !

Thanks for spending time reading the Inspirational Tamil Quotes in Tamil. If you do like Tamil quotes, share them with your friends. For any correction or suggestion, kindly contact us by clicking here. Check out the similar quotes below.  

Related Quotes