The Reviewed Link for the Marriage Wishes In Tamil Quotes is below. If you like our quotes, Kindly share them with your friends and family. Follow us on social media to get high-quality image quotes. Our social media links are given in the footer.
திருமணம் என்பது அழகான கலை அதில் ஆயிரம் வாழ்க்கை கிளை ஒன்று முறிந்தாலும் மரமே விழுந்துவிடும்
நீ என்ற சொல்லில் அவள் என்பதை பொருளாக்கி வாழ்ந்திடு அவள் என்ற பொருளில் நீ என்பதை சொல்லாக்கி வாழ்ந்திடு இதை விட ஆனந்தம் யுகத்திலில்லை
எழில் பொங்கும் உன் முகம் அதை என் விழி காணும் போதிலே வழிமாறிப் போகுதே என் வாழ்ககையின் பாதை அப்பாதையெங்கும் என் கைகோர்த்து நடக்குதே என் தேவதை அது நீதானே
முத்துக்கள் எடுக்கும் கடலைவிட அன்புகள் நிறைந்த பேரானந்த வாழ்க்கையே பெறுமதியானது
பத்துப் பொருத்தங்களைப் பார்த்து, ஒன்பது கோள் நிலைகளை அறிந்து, எட்டுத்திசையிலிருந்தும் உறவை அழைத்து, ஏழு அடி எடுத்து வைத்து, அறுசுவை உணவு படைத்து, பஞ்ச பூதங்களும் சாட்சியாக, நான்கு வேதங்கள் முழங்க, மூன்று முடிச்சுகளால் இரு மனங்கள் ஒன்று சேரும், ஓர் அற்புத பந்தத்தின் உறவே, திருமணம்
கருத்தொருமித்த தம்பதியராய்... சுற்றம் வியக்கும் வாழ்வை காண்பீர்.. உதாரணத் தம்பதியராய்... ஊர் போற்ற உறவும் போற்ற... இணைபிரியாத வாழ்வினிலே.. நூறாண்டு காலம் வாழ்ந்திடவே... உளம் கனிந்த நல்லாழ்த்துக்கள்.. திருமண நாள் நல்வாழ்த்துகள்
இந்த பந்தத்தில் அளவில்லா இன்பத்தை பெற வாழ்த்துகிறோம்
என் உடன்பிறவா தோழன் தோழி கொண்டாடும் இந்த மணநாள் நினைத்தது நடந்து வாழ்க்கை எனும் பாதை சீராகி இரு மனங்கள் ஒன்றுபட்டு என்றுமே நீடூழி வாழ வாழ்த்துக்கள்
ஊரே வியக்கும் வண்ணம் சிறந்த அன்பு கொண்ட நேசங்களாகி திருமண வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்ந்து வாழும் தம்பதியராக இல்லறத்தில் புரிதல் உணர்வுடன் இரு நெஞ்சங்களும் சுற்றத்தாரின் வாழ்த்துகளோடு நூறாண்டு காலம் வாழ்ந்திட இந்த இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.
திருமண நாள் நல்வாழ்த்துக்கள். செல்வங்கள் கோடிகள் சேர்த்து, இலக்குகளை அன்பால் கோர்த்து, வாழ்க்கையில் ஆனந்த வெளிச்சம் தடையின்றி மின்னிட கவி பாடுகிறேன்
கண் மூடி கண்ட கனவெல்லாம் கண் எதிரே காணும் விழாக்கோலம் கனவும் நினைவாக வாழ்வில் நகரும் அன்பின் தோரணம் திருமணம்
பூக்கள் கோர்த்து பரிசுகள் தருவதை விட வார்த்தைகள் சேர்த்து நேசத்தை புரிந்தால் உன் இலக்கும் அவன் பயணமும் ஒன்றாகும் ஒருவரை ஒருவர் ஆழமாக புரிவதில் தான் வாழ்க்கையின் ரகசியம் ஒளிந்துள்ளது. திருமண நாள் நல்வாழ்த்துக்கள்
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே கட்டப்பட்ட காதல் பாலத்தில் நகரும் பயணங்கள் இனித்திடும் உயிர்களின் இணைவு திருமணம்.
மஞ்சள் குங்குமம், மயக்கும் மலர்மணம்... கொஞ்சும் குழந்தையோடு, குலைவாழையென குலம் செழிக்க... நெஞ்சம் நிறைய, கொஞ்சம் குறையா குணம் கொண்டு... இப்பிரபஞ்சம் காணா எம்மன்பு சகோதரனே! வாசம் குறையா, வனப்பு குறையா அன்பு மலர்ந்திட வீசும் தென்றலாய், விடியல் வெளிச்சமாய்.... என்றும் உம் விழியில் சுமந்திடும் உம் ஒவ்வோர் உயர்விலும் உற்றாறோடு உறுதுணையாய் எப்போதும் நாங்கள்! மனதோடு உறவாடி நிறைகுடமாய் நீடூழி வாழ...
நிலவிலிருந்து கைப்பிடி மண் கொண்டு வந்தமைக்கே கும்மாளமிடுவோர் மத்தியில் அமைதியாய் ஒரு நிலவையே தன் சொந்தமாக்கி குடிப் புகுகின்றான் இவன் இன்று
மிகப்பெரிய பூஞ்சோலை ஒன்று சில மலர்களை கையில் வைத்திருக்கிறது ..... நீ என்னுடன் பூபந்து விளையாடுகிறாய் !!!
காலமெல்லாம் - ஆம் உங்கள் ஆயுள் காலமெல்லாம் இதே நெருக்கம், அன்பு, உறவு, மகிழ்ச்சி நீடித்து இல்லற வாழ்வில் ஜோடியாய் திரியும் பறவைகளாய் வாழ வாழ்த்துகிறோம்....
நாள் பார்த்து பந்தலிட்டு இரு மனதிலும் கனவால் ஊஞ்சலிட்டு முன்றலில் வாழை மரம் நட்டு ஊர் சாட்சியாய் நடக்கும் உயிர்களின் புதுயுலகம் திருமணம்
இறைவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும். திருமண நாள் வாழ்த்துக்கள்
இணைபிரியா தம்பதியினராய் நூறாண்டு காலம் வாழ்க.. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்...
வெட்கங்கள் ஊமை மொழியாகும், ஆசைகள் உணர்வின் மொழியாகும், பாஷைகள் இதழின் மொழியாகும், காதல் திருமணத்தின் மொழியாகும்
பால் நிலவும் பகல் சூரியனும் நல் சொந்தங்களும் இனிய நட்புகளும் இணைந்து மகிழ்ந்து வாழ்த்தும்.. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
மௌனங்களாலும் வார்த்தைகள் மொழிபெயர்ப்பாகி வாழ்வின் பக்கத்தில் அவைகள் கவிதையாகி ஆனந்தம் வாழ்த்திட இரு உயிர்களின் புரிதலில் தான் விடையுண்டு. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
இரு உள்ளங்கள் இணையும் ஆரம்பம் திருமணம் இணைந்த இரு கரம் அன்பினில் எழுதிய காவியம் இல்லறம்..
வாழ்க்கைப் பயணத்தின் இனிய துவக்க விழா துணையொடு கரமிணையும் வண்ணமிகு திருமண விழா
இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக இருக்க என் மனமார்ந்த... இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்
காதல் என்ற வார்த்தைக்கு அர்த்தம் சொல்லி வந்த என் உயிரே இந்நாளில் நான் என் வாழ்க்கைக்கு அர்த்தமாக வந்தாய் நீ. திருமண நாள் நல்வாழ்த்துக்கள்
வெள்ளி பாத்திரத்தில் மோதிரம் தேடும் போட்டி உனக்கும் எனக்கும்...... உன் தங்க விரல்களை பிடிப்பதற்காகவே உன்னிடம் தோற்க பழகுகிறேன் முதன் முறையாக....!
அன்பை சுமக்கும் நீயும் அழகை சுமக்கும் அவளும் இணையும் திருமணத்தில் வாழ்த்துக்களை சுமந்து பூக்களாய் உங்கள் மீது போடுகின்றோம்.... வாழ்க வளமுடன்...
வானம் போல எங்குமே நீயும் அவளும் நீக்கமற நிறைந்து காதலில் வற்றாத நீரை போல உங்கள் வாழ்வில் புன்னகை என்றுமே நீங்காமல் இருவருக்குள்ளும் ஒற்றுமை தழைத்தோங்கி நீண்ட ஆயுகோடு சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழ வேண்டி வாழ்த்துகிறேன். இனிய திருமண நன்னாள் வாழ்த்துக்கள்.
கதிரும் கிழக்கும் போல நிலவும் ஒளியும் போல என்றும் ஒற்றுமையாய் வாழ வாழ்த்துகிறோம்
நம் திருமண நாளில் என் மனதும் உன் மனதும் இடமாற்றம் செய்யப்பட்டதை உலகிற்கே காட்டவே இந்த மாலை பரிமாற்றம்...!
நம் பயணிக்க இருக்கும் வாழ்வில் எதிர் கொள்ள இருக்கும் துன்பம் என்னை கடந்தே உன்னை நெருங்க வேண்டும் என்பதற்கே உன் கரம் பற்றி அக்கினி வலம் வருகிறேன் நான் !!!
சூரியனும் சந்திரனும் சாட்சியாய் நின்று சொந்தங்களும் பந்தங்களும் சுற்றத்தாரும் தொலை தூரத்து உறவினர்களும் நண்பர்களும் நெருக்கமான நேசங்களும் ஒன்று சேர வாழ்த்தும் பொன்னான இந்த திருமண விழா உனக்கு சிறப்பு வாய்ந்ததாக அமையட்டும்.....
பல தேவதைகள் கூடி வாழ்த்து சொல்ல பதுமை அவள் மணமேடை ஏற பூ மழையாய் மகிழ்ச்சி பொழிய காதல் கணவனுடன் கை கோர்க்க உன் வாழ்வில் என்றும் இன்பம் திளைக்க என் உயிர் தோழிக்கு மனமார்ந்த திருமணநாள் வாழ்த்துக்கள்
அன்பு எனும் வடம் பிடித்து திருமணம் எனும் தேர் இழுக்கும் உங்கள் வாழ்வில் புயல் போல் வரும் துன்பங்கள் தென்றலாய் மாற வாழ்த்துகிறோம்...! மனமாற வாழ்த்துகிறோம்...
நீங்கள் இருவரும் எத்தனை ஆண்டுகளாக ஒன்றாக இருந்தீர்கள் என்பது பற்றி அல்ல.' நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் எவ்வளவு வேடிக்கையாக இருக்கிறீர்கள் என்பது பற்றியது. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
அத்தனை தேவர்களும் ஒருங்கே வாழ்த்த உங்கள் திருமண வாழ்க்கை இனிதாய் அமைய வாழ்த்துகிறேன்.
Thanks for spending time reading the Marriage Wishes In Tamil Quotes. If you do like Tamil quotes, share them with your friends. For any correction or suggestion, kindly contact us by clicking here. Check out the similar quotes below.